Thursday 25 April 2024

குழந்தைகளை இஸ்லாமிய நிழலில் வார்த்தெடுப்போம்!!!

குழந்தைகளை இஸ்லாமிய நிழலில் வார்த்தெடுப்போம்!!!


உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற அருட்கொடைகளில் எல்லாம் மிக உயர்ந்த அருட்கொடை குழந்தைச் செல்வம்.

அந்த வகையில் அருட்கொடையாக கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நமக்கு மிகப் பெரும் பாக்கியமும் அமானிதமுமாவார்கள்.

ஏனெனில், அல்லாஹ்வின் அருட்கொடைகள்.அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் அமானிதமாகவே நோக்கப்படும்.

அமானிதமாக வழங்கப்பட்ட அருட்கொடைகளான அந்த குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஆனால், இந்த நவீன யுகத்தில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது என்பது பொறுப்பு வாய்ந்த சவாலான பணியாகவே திகழ்கின்றது. 

குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளிக்காரணிகளான மொபைல், வீடியோ கேமிங், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் ஊடுருவல்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ராணுவ வீரர் எல்லையை காப்பதற்கு ஒப்பான சிரமமான  பணியாகவே விளங்குகின்றது. 

அந்தவகையில் ஓவ்வொரு பெற்றோரும் கண்ணும் கருத்துமாக தமது பிள்ளைகளை ஈருலகத்திலும் வெற்றிபெற்றவர்களாக வார்த்தெடுப்பது பெற்றோர்கள் மீதுள்ள தார்மீகப் பொறுப்பும் கடமையுமாகும்.

ஏன் நாம் குழந்தைகளை இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுக்க வேண்டும்?

1) ஈமானிய விஷயங்களில் பெற்றோரை பின் தொடர்பவர்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

2) உலகில் வாழும் காலத்தில் கண் குளிர்ச்சியாகவும், மேன்மக்களுக்கே வழிகாட்டியாகும் பாக்கியம் பெற்றவர்களாகவும் பிள்ளைகள் உருவாக்கப்பட வேண்டும்.

3) ஒரு பெற்றோர் இந்த உலகை விட்டும் விடைபெற்றுச் சென்றதன் பின்னர் அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கைக்காக கவலையுற்று துஆச் செய்யும் பிள்ளைகள் உருவாக வேண்டும்.

4) நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணை மன்றத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும்.

5) நாளை மறுமையில் கொடிய நரகில் வீசப்படும் அபாயகரமான சூழலை விட்டும் பாதுகாப்பதற்காக பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும்.

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَـقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَاۤ اَلَـتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَىْءٍ‌ؕ كُلُّ امْرِیءٍۢ بِمَا كَسَبَ رَهِيْنٌ‏

எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 52: 23 )

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

மேலும் அவர்கள்: எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். ( அல்குர்ஆன்: 25: 74 )

عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: "إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له".  

மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، فَالإِمَامُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى أَهْلِ بَيْتِ زَوْجِهَا ، وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ ، وَعَبْدُ الرَّجُلِ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஆண்மகன் குடும்பத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவன் வீட்டில் பொ றுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். வேலைக்காரர் தனது எஜமானனின் சொத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்.” ( நூல்: புகாரி )

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். ( அல்குர்ஆன்: 66: 6 )

01) குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்:

 

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும்.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்) (2 :128)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) (14 :40)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று அவர்கள் கூறுகின்றனர். (25 :74)

2) அறிவுரைகள் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (13) وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ (14) وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (15) يَابُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (16) يَابُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ (17) وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ

லுக்மான் (அலை)  தமது மகனுக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார். ஒருநாள் அவர் தமது மகனை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினார். 

என்னருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிடாதே! இணை வைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு அடியான் செய்யும் மிகப்பெரும் அநியாயமாகும்.பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்! உனது பெற்றோர்கள் உனக்காகப் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார். உன் தாய் கஷ்டத்தின்மேல் கஷ்டத்தை அனுபவித்து உன்னைச் சுமந்தாள். கஷ்டப்பட்டு உன்னைப் பெற்றெடுத்தாள். அதன்பின்னும் 2 வருடங்கள் உனக்குப் பாலூட்டினாள். எனவே அல்லாஹ்வுக்கும் நன்றியுடையவனாக இரு! உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துபவனாக இரு!

என்னருமை மகனே! நீ செய்வது கடுகைப் போன்ற சிறிய செயலாக இருந்தாலும் அதை நீ பூமியிலோ வானத்திலோ பாலைவனத்திலோ யாரும் பார்க்காத வண்ணம் செய்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். எனவே தனியாக இருக்கிறோம், யாரும் பார்க்க மாட்டார்கள் என்று பாவம் செய்துவிடக் கூடாது. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இதை நீ மறந்துவிடக் கூடாது!

மகனே! தொழுகையைப் பேணி தொழுதுவா! நன்மையை ஏவு, தீமையைத் தடு! இதனால் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்துக் கொள்! இதில் நீ பின்வாங்காதே!

நீ பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! மக்களில் பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை விட்டும் உன் முகத்தை திருப்பி விடாதே! அல்லாஹ் பெருமைப் பிடித்தவர்களை விரும்புவதில்லை. மக்களுடன் சராசரியாக சாமானியமாகப் பழக வேண்டும்!

நீ நடந்தால் அந்த நடை நடுநிலையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது சப்தத்தை உயர்த்திப் பேச வேண்டாம். கழுதை கத்துவதைப் போல் கத்த வேண்டாம். கழுதையின் சப்தம் யாருக்கும் பிடிக்காதல்லவா?" (அல்குர்ஆன்: 31:12-19 )

قال ابن مسعود رضي الله عنه: "حافظوا على أولادكم في الصلاة، وعلِّمُوهم الخير؛ فإنما الخير عادة"؛ [أخرجه البيهقي في السنن الكبرى]. 

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- "தொழுகையில் பேணித் தொழக்கூடியவர்களாக உங்கள் குழந்தைகளை ஆக்குங்கள். நல்ல விஷயங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுங்கள்! ஏனெனில், நல்ல விஷயங்களைத் தான் வாழ்க்கையில் தொடர்படியாக செய்ய முடியும் ". ( நூல்: பைஹகீ )

وقال ابن عمر رضي الله عنه لرجل: "أدِّب ابنَكَ؛ فإنك مسؤول عن ولدك ماذا أدَّبْتَه، وماذا علَّمْتَه، وإنه مسؤول عن بِرِّكَ وطواعيته لك"؛ [أخرجه البيهقي في السنن الكبرى].

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- "உங்கள் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுங்கள்! ஏனெனில், உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த ஒழுக்கம் குறித்தும்,  அல்லாஹ் உங்களை கேள்வி கேட்பான். மேலும், உங்களுக்கு கட்டுப்பட்டு உங்களுக்கு உபகாரம் செய்து வாழ்வது குறித்து உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தது குறித்து அல்லாஹ் உங்களிடம் கேள்வி கேட்பான்". ( நூல்: பைஹகீ )

3) சிறு வயதிலேயே நன்மையான காரியங்களில் பழக்கப்படுத்துதல்.

 

عن ابن عباس رضي الله عنه، قال: إن امرأة أخذت بعَضُدِ صبيٍّ، فقالت: يا رسول الله، هل لهذا حج؟ فقال النبي صلى الله عليه وسلم: ((نَعَم ولك أجر))؛ [أخرجه مسلم].

நபி (ஸல்) அவர்களின் சமூகம் தந்த பெண் ஒருவர் தம்மோடு அழைத்து வந்த சிறுவனை காட்டி இந்த சிறுவன் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், செய்யலாம். அவன் செய்யும் அமலின் கூலியில் உமக்கும் பங்குண்டு" என்று பதிலளித்தார்கள்.

சும்மா அழைத்துச் சென்றதற்காக கூலி இல்லை. மாறாக, அந்த சிறுவன் ஹஜ் கிரியைகளை செய்வதன் ஊடாக அவருக்கு நன்மை கிடைக்கும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

عن السائب بن يزيد قال: "حجَّ بي أبي مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع وأنا ابن سبع سنين"؛ [أخرجه البخاري].

ஸாயிப் இப்னு யஸீத்  (ரலி) அவர்கள் கூறினார்கள்:- "நான் நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் எனது தந்தையுடன் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு ஏழு வயது தான் இருக்கும் ".  ( நூல்: புகாரி )

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ: «مَنْ أَصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا، فَليَصُمْ»، قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ

ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம்.அறிவிப்பவர் : ருபைய்யி பின்த் முஅவித் (ரலி) ( நூல்கள்: புகாரி, முஸ்லிம் )

4)  நன்மை தீமை & ஹலால் ஹராம் மற்றும் பண்பாடுகள்ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.

وَاذْكُرْ فِى الْـكِتٰبِ مَرْيَمَ‌ۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,

فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا‏

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

 

قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا‏

(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)என்றார்.

قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ‌لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا‏

நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.

قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا‏

அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.

முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவரிடம் (ஜிப்ரயீல் - அலை) அவர் முன் வந்து பேசும் போது அன்னை மர்யம் (அலை) அவர்கள் பதிலளித்த ஒவ்வொன்றும் கவனிக்க வேண்டிய அம்சங்களாகும். இதில் தான் மர்யம் (அலை) அவர்களின் தாயார் ஹன்னா மற்றும் ஜகரிய்யா (அலை) ஆகியோரின் வளர்ப்பு முறை நமக்கு பளிச்சென்று வழிகாட்டுகிறது.

فَجَآءَتْهُ اِحْدٰٮہُمَا تَمْشِىْ عَلَى اسْتِحْيَآءٍ قَالَتْ اِنَّ اَبِىْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَـنَا‌ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَف نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏

(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்என்று கூறினார்

அந்நிய ஆண் ஒருவர் (மூஸா - அலை) முன்பாக ஷுஐப் (அலை) அவர்களின் மகளாரின் நடை விஷயத்தில் ஷுஐப் (அலை) அவர்களின் வளர்ப்பு முறையை நாம் புரிந்து கொள்ளலாம்.

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخٰـطِــِٕيْنَ

அதற்கவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்என்று கூறினார்கள்.

قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَ‌ؕ يَغْفِرُ اللّٰهُ لَـكُم وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏

அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்என்று கூறினார். . ( அல்குர்ஆன்: 12: 91, 92 )

 

قَالُوْا يٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰـطِــِٕيْنَ‏

(அதற்கு அவர்கள்) எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்என்று கூறினார்கள்.

( அல்குர்ஆன்: 12: 97 )

தவறு செய்தவர்களை மன்னிக்கும் மகனாக யூஸுஃப் (அலை) அவர்களின் பெருந்தன்மையிலும், செய்த தவறுகளுக்காக தந்தையே இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள்! என்று மற்ற மகன்கள் அனைவரும் கோரிக்கை விடுக்கும் போது அவர்களின் குற்ற உணர்விலும் இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்களின் உருவாக்கம் நம் கல்புகளை தட்டுகிறது.

وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّيْهِ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا يَشْعُرُوْنَۙ‏

இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: அவரை நீ பின் தொடர்ந்து செல்என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.

وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّـكُمْ عَلٰٓى اَهْلِ بَيْتٍ يَّكْفُلُوْنَهٗ لَـكُمْ وَهُمْ لَهٗ نٰصِحُوْنَ‏

நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.” ( அல்குர்ஆன்: 28: 11, 12 )

எதிரிகள் சூழ் உலகில் எப்படி சமயோஜிதமாக வாழ்வது என்பதை மூஸா (அலை) அவர்களின் தாயார் மூஸா (அலை) அவர்களின் சகோதரிக்கு கற்றுக் கொடுத்ததை நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறுஎன்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம். ( அல்குர்ஆன்: 37: 102 )

இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்த காரணத்தினால் தான் அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.

அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட தந்தையும் மகனும்....

ஒருநாள் தாவூத் நபியின் அரசவைக்கு ஒரு புதிய பிரச்சனை வந்தது. ஒரு கூட்டத்தினர் விவசாயிகள். மற்றொரு கூட்டத்தினர் ஆடு மேய்ப்பவர்கள். விவசாயிகள் விவசாயம் செய்து பயிர் நன்றாக வளர்ந்திருந்தது. பார்க்கப் பசுமையாக இருந்தது. இந்நிலையில் இடையர்களின் ஆடுகள் அந்த விவசாய நிலங்களை மேய்ந்து அழித்துவிட்டன. இந்த முறைப்பாட்டுடன் இரு தரப்பாரும் தாவூத் நபியின் அரசவைக்கு வந்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பயிர்களாகும். இடையர்களின் வாழ்வாதாரம் ஆடுகளாகும். அவர்களின் வாழ்வாதாரத்தை இவர்களின் வாழ்வாதாரம் அழித்துள்ளது. எனவே இடையர்கள் தங்களது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுத்துவிட வேண்டும். ஆடு விவசாயிகளுக்குரியதுஎன்று தீர்ப்புக் கூறினார்கள். இந்தத் தீர்ப்பு இடையர்களுக்கு பெரும் இடியாக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அடிபட்டுவிட்டதை உணர்ந்தார்கள்.

இதனை அறிந்த சுலைமான் நபி, “இதற்கு நான் தீர்ப்புக் கூறி இருந்தால் எனது தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும்என்று கூறினார்கள். தாவூத் நபி, “அந்தத் தீர்ப்பு என்ன? ” என்று கேட்டார்கள். சுலைமான் நபியின் தீர்ப்பு இப்படி இருந்தது. இடையர்கள் தமது ஆடுகளை விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும், விவசாயிகள் தமது விளை நிலத்தை இடையர்களிடம் கொடுக்க வேண்டும். இடையர்கள் பயிரிட்டு அதைப் பாதுகாக்க வேண்டும். பயிர்களை ஆடுகள் உண்ணும் போது இருந்த அளவுக்கு வரும்வரை நீர் பாய்ச்சிப் பயிரைப் பாதுகாக்க வேண்டும். பின்னர் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளிக்க வேண்டும். அதுவரை விவசாயிகள் இவர்களது ஆடுகளைப் பராமரிக்க வேண்டும்.

விவசாயிகளைப் பொறுத்தவரை இவர்கள் ஆடுகளைப் பராமரிப்பது என்பது மேலதிக வேலை. அத்துடன் அவர்களின் அறுவடையும் இவர்களின் ஆடுகள் உண்டதனால் தாமதமாகும். எனவே இதற்குப் பகரமாக தாம் பராமரிக்கும் காலப் பகுதியில் அந்த ஆடுகளிடமிருந்து அவர்கள் பால் கறந்து கொள்வார்கள். இடையர்கள் விவசாய நிலத்தை விவசாயிகளிடம் கையளித்த பின்னர் விவசாயிகள் ஆடுகளை இடையர்களிடம் கையளிக்க வேண்டும்என்று தீர்ப்புக் கூறினார்.

وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ (78) فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ

இந்தத் தீர்ப்பை இருதரப்பும் மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொண்டனர்.தாவூத் மற்றும் சுலைமான் இருவருக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுத்ததாகவும் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை சுலைமானுக்கு அல்லாஹ்வே புரிய வைத்ததாகவும் கூறுகின்றான். ( அல்குர்ஆன்: 21:  78,79 )

 

6) சான்றோர்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكٌ ، عَنْعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَأَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللهِ أَخْبِرْنَا بِهَا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்என்றார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), ( நூல்: புகாரி )