Thursday 31 March 2016

எது முதலில்…..? பாகம் – 2



எது முதலில்…..? பாகம் – 2





பரந்து விரிந்த இப்பாருலகில் முஸ்லிம் உம்மத் எதிர் கொண்டு வருகிற ஏராளமான பிரச்சனைகளில் எதை முதலில் சரி செய்வது? அதை எங்கிருந்து துவங்குவது? அதை எவ்வாறு அணுகுவது? என்ற கோணத்தில்எது முதலில்…?” எனும் தலைப்பில் கடந்த வார ஜும்ஆவில் சில தகவல்களைப் பரிமாறியிருந்தோம்.

அதில் மகிழ்ச்சியான குடும்பங்களை அமைப்பதில், உருவாக்குவதில் இந்த உம்மத் கவனம் செலுத்துவதே இன்றைய இன்றியமையாத தேவை என்பதையும், அதிலும் குறிப்பாக திருமணம் என்கிற ஒரு சொல்லாடல் மூலம் கணவன்மனைவி என்கிற பந்தத்தில் இணைகிற அந்த உறவு சீரமைக்கப் படவேண்டும் என்பதையும் அதற்கான வழிகாட்டலையும் கடந்த வார ஜும்ஆவில் கண்டோம்.

மனித சமூக முற்றத்தில் இன்றைக்கு மணவிலக்குகள் பல்கிப் பெருகிப் போய் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்கள் மணவிலக்குக்காக நீதி மன்றங்களின் படியேறி காத்திருக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் இன்று குலாஃவை கையில் எடுத்து சமுதாயத்தின் எல்லா மட்டத்தில் உள்ளவர்களையும் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு காலத்தில் தலாக்கை பயன் படுத்தி எப்படி ஆண் சமூகம் பெண்களை சேதாரப்படுத்தியதோ, அது போன்று குலாஃவைப் பயன்படுத்தி பெண்கள் இன்று முஸ்லிம் சமூகத்தையே சேதாரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றிற்கெல்லாம் காரணம் முஸ்லிம் சமூகம் அடிப்படையான பல அம்சங்களைக் கோட்டை விட்டதே காரணம் என்பது தெரியவரும்.

1. திருமணம் செய்ய வேண்டிய பருவத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்….

2. தனிமையை கண்காணிக்காத பெற்றோர்களும், தடம் புரளும் பருவ வயதினரும்…..

3. துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவசரப்படும் பருவ வயதினரும்பெற்றோர்களும்….

இதில் முஸ்லிம் சமூகம் கோட்டை விட்ட நான்காவது அம்சம் என்னவெனில்..

4. திருமணத்திற்கு முன்பாக கணவன்மனைவி உறவு என்றால் என்ன? என்பது பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்

1. திருமணத்திற்கு தயாராகி நிற்கும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்….

கணவன் மனைவி உறவென்பது மிகவும் உயர்ந்த ஒரு உறவாகும் என்பதை சொல்லிக் கொடுக்கவேண்டும்.

அல்லாஹ் முதன் முதலாக மனிதனுக்காக உருவாக்கிய உறவு கணவன்மனைவி என்கிற உறவைத்தான்.

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவர்களுக்கு துணையாக ஹவ்வா (அலை) அவர்களை மனைவி என்கிற உறவோடு படைத்தான்.

சுவனத்திற்குள் முதன் முதலாக நுழைந்த உறவும் அது தான். மறுமை நாளில் ஜோடியாக நுழைகிற முதல் உறவும் கணவன்மனைவி என்கிற உறவு தான்.

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا

அல்லாஹ் கூறுகின்றான்: “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள்; அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்”.

                                                       ( அல்குர்ஆன்: 2: 35 )
ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ ()

நுழைந்து விடுங்கள்! சுவனத்தில், நீங்கள் உங்கள் துணைகளோடு! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!”. ( அல்குர்ஆன்: 43: 70 )

அல்லாஹ் கூறுகின்றான்: “ நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும், உங்களுக்கு அவர்கள் ஆடையாகவும் இருக்கின்றீர்கள்”. ( அல்குர்ஆன்: 2: 187 )

எப்படி ஒரு உடை அதை அணிபவர்களுக்கு அழகையும், கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்குகின்றதோ, மறைக்க வேண்டியதை வெளிப்படுத்தாமல் பாதுகாக்கின்றதோ பரஸ்பரம் அது போன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அமைந்திருக்க வேண்டும்.

2. திருமணத்திற்கு தயாராகி நிற்கும் ஒரு பெண்ணுக்கு

1. தான் விரும்பியவாறு சுவனத்தில் நுழைவதற்கு உதவும் ஓர் உறவு கணவனின் உறவு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
رواه الإمام أحمد عن عبد الرحمن بن عوف قال: قال رسول الله صلى الله عليه وسلم
 إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت
 ورواه ابن حبان في صحيحه عن أبي هريرة رضي الله عنه،
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெண் ஐவேளைத் தொழுகியையும் பேணித் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பும் நோற்று, தன் மறை உறுப்புக்களை தவறான வழிகளில் இருந்து பாதுகாத்து, மேலும், தன் கணவனுக்கு கீழ்ப்படிந்தும் நடக்கின்றாள் எனில்அவள் சொர்க்கத்தின் வாயில்களில் எந்த வாயிலை விரும்புகின்றாளோ, அதன் வழியாக சுவனத்திற்குள் பிரவேசித்துக் கொள்ளட்டும்!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.            ( நூல்: மிஷ்காத் )

2. மஹ்ஷர் பெருவெளியில் ரப்பின் முன்பாக பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நிறைந்த உறவு

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெண் தன் கனவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள், அது குறித்து நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.( முஸ்லிம் )

3. திருமணத்திற்கு தயாராகி நிற்கும் ஒரு ஆணுக்கு….

1. மனிதர்களில் மிகச் சிறந்தவன் என பெயர் வாங்கித் தரும் உறவு
رواه الترمذي وابن ماجه عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم
 خيركم خيركم لأهله، وأنا خيركم لأهلي،

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் மிகச்சிறந்தவர் உங்களின் மனைவியரிடம் சிறந்தவர் என்று நற்சான்று பெற்றவரே, நான் எனது மனைவியரிடத்தில் அந்த நற்சான்றைப் பெற்றுள்ளேன்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                  ( இப்னு மாஜா )

எனவே, இத்தகைய மாண்புகளை உணர்ந்து திருமணம் செய்து கொண்டதன் பின்னர் கணவன்மனைவி உறவு என்பது உண்மையில் அல்லாஹ் கூறும் நிம்மதி, மன அமைதி தரும் உயர்ந்த ஓர் உறவாக அமைந்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அத்தோடு திருமணமான பின்பு ஒரு கணவன் தன் மனைவியோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு மனைவி தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

இங்கு கணவன்மனைவி இருவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சில பண்புகளை கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

1. ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைய தம்பதியர்களிடையே மட்டுமல்ல நீண்ட காலம் வாழ்ந்த தம்பதியர்களிடையேயும் இல்லாத ஒன்று இது.

ஒரு நாள் அண்ணலாரும், ஆயிஷா (ரலி) அவர்களும் மக்காவின் ஆரம்ப நாட்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஆயிஷா (ரலி) அவர்கள் தாங்கள் சிறுவயதுப் பெண்மணியாக இருந்த போது நடந்த ஒரு நிகழ்வை நபி {ஸல்} அவர்களிடம் விவரித்தார்கள்.

“நானும் பதினோரு பெண்களும் ஓரிடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது அப்பெண்மணிகள் தங்களின் கணவன்மார்கள் குறித்து ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்தார்கள்.

قَالَتِ الْحَادِيَةَ عَشْرَةَ زَوْجِى أَبُو زَرْعٍ فَمَا أَبُو زَرْعٍ أَنَاسَ مِنْ حُلِىٍّ أُذُنَىَّ ، وَمَلأَ مِنْ شَحْمٍ عَضُدَىَّ ، وَبَجَّحَنِى فَبَجِحَتْ إِلَىَّ نَفْسِى ، وَجَدَنِى فِى أَهْلِ غُنَيْمَةٍ بِشِقٍّ ، فَجَعَلَنِى فِى أَهْلِ صَهِيلٍ وَأَطِيطٍ وَدَائِسٍ وَمُنَقٍّ ، فَعِنْدَهُ أَقُولُ فَلاَ أُقَبَّحُ وَأَرْقُدُ فَأَتَصَبَّحُ ، وَأَشْرَبُ فَأَتَقَنَّحُ ،

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அதில் உம்மு ஸர்வு என்ற பெண்மணி தம் கணவர் அபூஸர்ஹ் குறித்து “என் கணவர் அபூ ஸர்வு எப்படிப்பட்டவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கின்றார். ஆசையாக உணவளித்து என்னை கொழுக்கச்செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்துள்ளார்.

ஒரு மலைக்குன்றின் அருகே சிறிது ஆடுகளுடன் வாழ்ந்த என்னை, மனைவியாக ஏற்று இன்று ஏராளமான குதிரைகளும், ஒட்டகங்களும், தானியக் குவியலும் செல்வங்களின் அரவமும் நிறைந்த வீட்டில் வாழச் செய்துள்ளார்.

நான் அவரிடம் எதையும் பேசுவேன்; என்னை அவர் அலட்சியப் படுத்திய தில்லை. நான் எவ்வளவு நேரம் தூங்கினாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் ஏன் என்று எவரும் கேட்டதில்லை.

ஆனால், அபூஸர்வு என்னை விவாகவிலக்கு செய்து விட்டு, இன்னொரு பெண்ணை திருமணம் செய்து விட்டார்.

فَلَقِىَ امْرَأَةً مَعَهَا وَلَدَانِ لَهَا كَالْفَهْدَيْنِ يَلْعَبَانِ مِنْ تَحْتِ خَصْرِهَا بِرُمَّانَتَيْنِ ، فَطَلَّقَنِى وَنَكَحَهَا ، فَنَكَحْتُ بَعْدَهُ رَجُلاً سَرِيًّا ، رَكِبَ شَرِيًّا وَأَخَذَ خَطِّيًّا وَأَرَاحَ عَلَىَّ نَعَمًا ثَرِيًّا ، وَأَعْطَانِى مِنْ كُلِّ رَائِحَةٍ زَوْجًا وَقَالَ كُلِى أُمَّ زَرْعٍ ، وَمِيرِى أَهْلَكِ . قَالَتْ فَلَوْ جَمَعْتُ كُلَّ شَىْءٍ أَعْطَانِيهِ مَا بَلَغَ أَصْغَرَ آنِيَةِ أَبِى زَرْعٍ .
قَالَتْ عَائِشَةُ قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « كُنْتُ لَكِ كَأَبِى زَرْعٍ لأُمِّ زَرْعٍ »

நானும், இன்னொருவரை திருமணம் செய்தேன். அவர் எனக்கும் கொடுத்து என் குடும்பத்தாருக்கும் கொடுத்தார். ஆனால், அபூஸர்வு கொடுத்த அளவு அவரால் கொடுக்க முடியவில்லை” என்று உம்மு ஸர்வு கூறியதாக கூறி முடித்த ஆயிஷா (ரலி) அவர்களின் தோள்களைப் பற்றிப் பிடித்தவாறு வாஞ்சையோடு “ஆயிஷாவே! உம்மு ஸர்வுக்கு அபூஸர்வு எப்படியோ அப்படியே உனக்கு நானும் அன்பாளனாய் இருப்பேன்” ஆனால், ஒரு போதும், உம்மை விவாக விலக்கு செய்யமாட்டேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: புகாரீ )

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ قَالَ لِى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « إِنِّى لأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّى رَاضِيَةً ، وَإِذَا كُنْتِ عَلَىَّ غَضْبَى » . قَالَتْ فَقُلْتُ مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ فَقَالَ « أَمَّا إِذَا كُنْتِ عَنِّى رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لاَ وَرَبِّ مُحَمَّدٍ ، وَإِذَا كُنْتِ غَضْبَى قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ » . قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ ، مَا أَهْجُرُ إِلاَّ اسْمَكَ .

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என்னிடம் நபி {ஸல்} அவர்கள், “எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியாக இருக்கின்றாய்; எப்போது நீ என்னைக் குறித்து அதிருப்தியாக கோபத்துடன் இருக்கின்றாய் என்று உன்னைப் பற்றி நான் நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அதற்கு, நான் ”எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று வினவினேன். அப்போது, நபி {ஸல்} அவர்கள் “என்னைக் குறித்து நீ திருப்தியோடு இருந்தால் பேச்சின் இடையே “முஹம்மதின் இறைவன் மீது சத்தியமாக” என்று கூறுவாய்! என் மீது கோபமாக இருந்தால் “இப்ராஹீம் (அலை) அவர்களின் இறைவன் மீது சத்தியமாக” என்று கூறுவாய்!” என்று சொன்னார்கள்.

அதற்கு, நான் “உண்மைதான் அல்லாஹ்வின் தூதரே! ஆனால், ஒன்று நான் தங்களது பெயரின் மீது தான் கோபம் கொள்வேனே தவிர, தங்களின் மீது அல்ல” என்று கூறினேன்.                                                ( நூல்: புகாரீ )

2. சிறு சிறு விஷயங்களில் கூட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்…

وعن عائشة
 رضي الله عنها
 رواه مسلم

அன்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் அண்ணலார் வருகை தந்திருக்கின்ற முறை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இரவின் நடுப்பகுதியில் எழுந்து தொழ ஆரம்பித்து விட்டார்கள்.

நடு நிசியில் கண்விழித்த ஆயிஷா (ரலி) அவர்கள், அருகில் உறங்கிக் கொண்டிருந்த நபிகளாரைக் காணாமல் பதட்டமடைந்து இருட்டாக இருந்ததால் தங்களின் கையால் தேடுகின்றார்கள்.
கொஞ்சம் தள்ளி அண்ணலாரின் காலை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அப்போது, நபி {ஸல்} அவர்கள் “ஆயிஷாவே! உன்னிடம் ஷைத்தான் வந்து விட்டானா?” ( அதாவது நான் வேறெந்த மனைவியின் வீட்டும் பாதி இரவிலேயே சென்று விட்டேன் என்று சந்தேகித்துக் கொண்டாயா?” எனும் பொருள்பட ) என்று கேட்டார்கள்.

உடனே, ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படியானால், ”அல்லாஹ்வின் தூதரே! உங்களின் ஷைத்தான் என்ன செய்து கொண்டிருக்கின்றான்” என்று கேட்டார்கள்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ் ஷைத்தானை எனக்கு முற்றிலும் வழிப்பட வைத்து விட்டான். என்னிடம் ஷைத்தான் நல்லதைத் தவிர வேறொன்றையும் அவன் எனக்கு சொல்வதில்லை” என்று பதில் கூறினார்கள்.

                                                         ( நூல்: நஸாயீ )

இதற்குப் பின்னர் நபி {ஸல்} அவர்கள் இரவு வணக்கத்தில் ஈடுபட விரும்பினால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதி வாங்கி விட்டு வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் அதற்கு அனுமதி வழங்கி விடுவார்கள்.

4. நன்மையான காரியங்களில் ஒன்று பட்டு செயல்பட வேண்டும்….

فقد سأل الصحابة النبي صلى الله عليه وسلم فقالوا
 لو علمنا أي المال خير فنتخذه؟ فقال: أفضله لسان ذاكر، وقلب شاكر، وزوجة مؤمنة تعينه على إيمانه. رواه أحمد والترمذي وصححه الألباني وفي رواية: ليتخذ أحدكم قلبًا شاكرًا، ولسانًا ذاكراً، وزوجة مؤمنة تعينه على أمر الآخرة. رواه أحمد والترمذي وصححه الألباني.
ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் பயணத்தில் இருக்கும் போது 9 –ஆம் அத்தியாயத்தின் 33 –ஆம் இறைவசனம் “தங்கத்தையும், வெள்ளியையும் பதுக்கி வைப்பவர்கள்” என்று தொடங்கும் வசனம் இறங்கியது.

அப்போது, எங்களில் சிலர் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைப்பது தொடர்பாக இவ்வசனம் இறங்கியுள்ளது.  எனவே, இது போன்று இனி சேகரித்து வைப்பது நல்லதன்று” எனவே, எந்தச் செல்வம் நல்லது என்று நமக்குத் தெரிந்து கொண்டால் அதனை சேர்க்க நாம் முயற்சி செய்யலாமே என்று கூறினார்கள்.

இவ்வாறு கூறியதை அறிந்த நபி {ஸல்} அவர்கள் “அனைத்தையும் விட சிறந்த சேமிப்புப் பொருள்கள் “இறைவனை நினைவு கூறும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறி நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவையே!” என்று கூறினார்கள்.                                               ( நூல்: திர்மிதீ )
ذات ليلة خرج سيدنا عمر بن الخطاب رضي الله عنه في جولة من جولاته التي كان يخرج فيها وحيدا والناس نيام ليطمئن على امته ويبلو احوالهم و ينفض الليل عن حاجتهم

وعند مشارف المدينة راى كوخا ينبعث منه انين امرأة فاقترب يسعى وراى رجلا يجلس بباب الكوخ وعلم أنه زوج السيدة التي تئن وعلم أنها تعاني كرب المخاض وليس معها أحد يعينها لان الرجل وزوجته من البادية وقد حط رحالهما هنا وحيدين غريبين

ورجع ((عمر)) الى بيته مسرعا و قال لزوجته ((ام كلثوم)) بنت الامام علي كرم الله وجه
-هل لك في مثوبة ساقها الله اليك..
-قالت
خيرا
-قال امراة غريبة تمخض و ليس معها احد
-قالت
نعم إن شئت
وقام فاعد من الزاد و الماعون ما تحتاج إليه الوالدة من دقيق وسمن ومزق ثياب يلف فيها الوليد.

وحمل امير المؤمنين القدر على كتف و الدقيق على كتف وقال لزوجته(( اتبعيني))
ويأتيان الكوخ وتدخله ((ام كلثوم)) زوج امير المؤمنين لتساعد المراة في مخاضها
اما امير المؤمنين فيجلس خارج الكوخ وينصب الاثافي ويضع فوقها القدر ويوقد تحتها النار. وينضج للوالدة طعاما , والزوج يرمقه شاكرا .. ولعله كان يحدث نفسه بان هذا العربي الطيب اولى بالخلافة من ((عمر))
و فجاة صدح في الكوخ صراخ الوليد.. لقد وضعته امه بسلام, واذا بصوت ((ام كلثوم)) ينطلق من داخل الكوخ عاليا:
-((يا امير المؤمنين بشر صاحبك بغلام))
ويفهق الاعرابي من الدهش, ويستأخر بعيدا على استحياء, ويحاول أن ينطق الكلمتين - أمير المؤمنين- لكن شفتيه لا تقويان على الحركة من فرط ما أفائته المفاجأة من سعادة وطرافة وذهول
ويلحظ ((عمر)) كل هذا , فيشير للرجل (( أن ابق مكانك , لا ترع)) ويحمل امير المؤمنين القدر

அன்றொரு நாள் கலீஃபா உமர் (ரலி) இரவில் நகர்வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

பாலைவனத்தை ஒட்டியப் பகுதி அது. தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது. வெளிச்சம் வந்த திசையை நோக்கி விரைந்தார்கள்.

அங்கே, ஒரு கூடாரம் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல், கூடாரத்துக்கு வெளியே ஒரு நாட்டுப்புற அரபி பதற்றத்துடன் நின்று கொண்டிருக்கின்றார்.

விரைந்து வந்த உமர், அந்த நாட்டுப்புற அரபியிடம் ஏன் உள்ளிருக்கும் பெண் அழுகிறாள். உமக்கு என்ன பிரச்சனை? என்று கேட்கிறார்கள்.

வந்தவர், கேட்பவர் கலீஃபா என்று அறியாத அந்த நாட்டுப்புற அரபி உமர் (ரலி) அவர்களை உதாசீனப்படுத்துகின்றார்.

விடாமல், உமர் (ரலி) அவர்கள் கேட்கவே, நாட்டுப்புற அரபி, உள்ளிருக்கும் பெண் என் மனைவி தான், பிரசவ வேதனையால் அழுது கொண்டிருக்கின்றாள். நாங்கள் இருவரும் கலீஃபாவைப் பார்த்து உதவிகள் பெற்றுச் செல்லலாம் என்று வந்தோம். வந்த இடத்தில் இப்படியாகிவிட்டது” என்றார்.

இங்கேயே இருங்கள்! இப்போது வந்து விடுகின்றேன்! என்று கூறிய உமர் அங்கிருந்து விடை பெற்று வீட்டுக்கு வந்து தங்களின் மனைவியை அன்புடன் அழைத்து “அல்லாஹ் உனக்கு கூலியை அதிகமாகப் பெற்றுத் தருகிற ஓர் அரிய வாய்ப்பை நல்கியிருக்கின்றான்; அதை பயன்படுத்த உமக்கு விருப்பம் இருக்கின்றதா? என்று கேட்டார்கள்.

நற்பேறு பெற்றவர் அலீ (ரலி) அவர்களின் மகள் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களல்லவா கலீஃபாவின் மனைவி, அப்படியென்ன நன்மையான காரியம்? என்று வினவினார்கள்.

நடந்த சம்பவத்தைக் கூறி விட்டு, பிரசவிக்கும் பெண்ணுக்கு தேவையான பொருட்களை எடுத்து வருமாறு பணித்து விட்டு, தாங்களும் சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு இருவருமாக பாலைவனத்தை நோக்கி ஓடுகின்றார்கள்.

கூடாரத்திற்குள் கலீஃபாவின் மனைவி பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். கூடாரத்திற்கு வெளியே கலீஃபா உணவு தயார் செய்து கொண்டிருக்கின்றார்.

ஒன்றும் புரியாமல் நாட்டுப்புற அரபி கலீஃபாவின் அருகே அமர்ந்து கொண்டிருக்கின்றார்.

கூடாரத்தின் உள்ளிருந்து பிரசவித்ததற்கான அடையாளம் வெளிப்படுகின்றது, ஆம்! குழந்தையின் அழுகுரல் கேட்கின்றது.

கூடாரத்தின் வெளியே வந்த உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள் “அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களின் தோழருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது என்று சோபனம் கூறுங்கள்” என்றார்கள்.

நாட்டுப்புற அரபியின் முகம் வெட்கத்தால் கூனிக்குருகிப் போயிற்று. ஒரு கலீஃபாவிடமா நாம் இவ்வாறு முகம் சுழிக்கும் அளவுக்கு நடந்து கொண்டோம்” என்று வருத்தப்பட்டார்.

உமர் (ரலி) அவர்கள் அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து மறுநாள் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.            ( நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்},,,,,   )

அல்லாஹ்வின் அருள் வசனம் ஒன்று இவ்வாறு இறக்கியருளப்பட்டது.

لما نزلت: { مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ } قال أبو الدحداح الأنصاري: يا رسول الله وإن الله ليريد منا القرض؟ قال: "نعم يا أبا الدحداح" قال: أرني يدك يا رسول الله. قال: فناوله يده قال: فإني قد أقرضت ربي حائطي. قال: وحائط له فيه ستمائة نخلة وأم الدحداح فيه وعيالها. قال: فجاء أبو الدحداح فناداها: يا أم الدحداح. قالت: لبيك قال: اخرجي فقد أقرضته ربي عز وجل. وقد رواه ابن مردويه من حديث عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن عمر مرفوعًا بنحوه

“அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுப்போர் யாரும் உள்ளார்களா? அழகிய கடன் கொடுத்தால் அல்லாஹ் அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தருவான்” என்று

அல்லாஹ்வின் தூதரோடு சபையில் இருந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் ”நம்மிடமிருந்து அல்லாஹ் கடன் கோருகின்றானா? என்று பெருமானார் {ஸல்} அவர்களிடம் வினவ, ஆம்! என நபி {ஸல்} அவர்கள் பதில் கூற, “தங்களுக்குச் சொந்தமான 600 பேரீச்சம் மரங்களைக் கொண்ட தோட்டத்தின் சாவியை நபி {ஸல்} அவர்களின் கரங்களில் வைத்து விட்டு, அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் அல்லாஹ்விற்காக அழகிய கடனை தந்து விட்டேன்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறி தோட்டத்தின் வாயிலில் நின்று கொண்டு உம்முத்தஹ்தாவே! நம் தோட்டத்தை அல்லாஹ்வுக்காக நான் கடன் வழங்கி விட்டேன்! அங்கிருந்து நீ எப்படி இருக்கின்றாயோ அப்படியே வெளியேறி விடு!” என்று கூறினார்கள்.

அது போன்றே உம்முத்தஹ்தா (ரலி) அவர்களும் மறு பேச்சு பேசாமல் வெளியேறி விட்டார்கள்.                                   ( நூல்: இப்னு கஸீர் )

நடு நிசி என்ற போதும் கணவர் அழைத்ததும் நன்மையான காரியம் என்பதால் ஒத்துப் போன உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களின் செயல்பாடும், உம்முத்தஹ்தாஹா (ரலி) அவர்களின் செயல்பாடும் வியப்பிற்குரியதே!

இன்னும் சில பண்புகளும், குணங்களும் இருக்கின்றன அவைகளைப்பேணி நடந்தால் மகிழ்ச்சியான குடும்பங்கள் உருவாகி, முஸ்லிம் சமூகத்தின் குடும்ப நிலைகள் நிம்மதியையும், சாந்தியையும், கருணையையும், அன்பையும் எய்தப் பெரும்.

அல்லாஹ் நம் குடும்பங்களில் மகிழ்ச்சியை பெருகச்செய்வானாக! ஆமீன்! வஸ்ஸலாம்!!!

இன்ஷா அல்லாஹ்…. வருகிற வாரத்தில் இருந்து “உஸ்மானிகள் ஆன் லைன்” அபூபக்கர் உஸ்மானி அவர்களின் மேலான இயக்கத்தின் கீழ் இயங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.